7-வது எமோஜியை அறிமுகப்படுத்தவுள்ள முகநூல்.!

சமூக வலைதளமான வாட்ஸ் அப் , ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் பயனாளர்கள் அதிகமாக எமோஜியை பயன்படுத்தப்படுகின்றன. காரணம் தங்களுடைய  உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளில் கூறுவதை விட பயனாளர்கள் எமோஜி மூலம் உணர்வுகளை  பயன்படுத்தி வருகின்றனர்.
அதிகம் பயனாளர்களை கொண்ட முகநூலில் முன்பு கமெண்டுகளுக்கு லைக் கொடுக்கும் முறை மட்டுமே இருந்தது. பின்னர் சில எமோஜிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்த எமோஜி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம்  மேலும் ஒரு எமோஜியை அறிமுகம் செய்ய உள்ளனர். தற்போது கொரோனாவால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நண்பர்களுக்கு  ஆறுதல் சொல்லும் விதமாக இந்த எமோஜி அறிமுகம் செய்ய உள்ளது.
இது பேஸ்புக்கின் 7-வது எமோஜியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அடுத்த வாரம் முகநூலில் பயன்பாட்டில் எமோஜி வரலாம் என்றும் கூறப்படுகிறது. புதியதாக அறிமுகப்படுத்தவுள்ள எமோஜிகள் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

author avatar
murugan