10 துண்டுகள் ரூ.215.. அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் வரட்டி..!!

முன்னாடி உள்ள காலங்களில் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது அதனால் பசுவின்

By gowtham | Published: Nov 20, 2019 06:21 PM

முன்னாடி உள்ள காலங்களில் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது அதனால் பசுவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னாள் வீடுகளில் உணவு சமைக்க விறகு அடுப்பு இருந்து வந்தது.விறகுகளுடன் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட வரட்டி தான் எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. முந்தியெல்லாம் மாட்டுச் சாணத்தை தண்ணீரில் கலந்து வீட்டு வாசலில் தொளிப்பார்கள்.தற்போது இது கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து விட்டது.மேலும் ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளில் வரட்டியை முக்கியமாக பயன்படுவது வழக்கம் இப்போதலாம் இந்த பயன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வரட்டி விற்பனைக்கு வந்துள்ளது உலக அளவில் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 10 துண்டுகள் கொண்ட ஒரு பேக்கின் விலை 2.99 அமெரிக்க டாலருக்கு இந்திய மதிப்பில் 215 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.மேலும் அந்த பேக்கில் 'மத சடங்குகளுக்கு மட்டும் ,உண்பதற்கு அல்ல'என்று குறிப்பிட்டுள்ளது.இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா.இல்ல அமெரிக்காவில் உள்ள மாடுகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாஎன்று தெரியவில்லை.
Step2: Place in ads Display sections

unicc