துப்பாக்கி சுடுதல் போட்டியில் களமிறங்கிய தல அஜித்! இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில்

By leena | Published: Jul 31, 2019 12:16 PM

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்தை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சிறு சிறு விமானங்கள் வடிவமைத்தல், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், கோவையில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் நடிகர் அஜித் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ட்வீட்டரில் #Ajith, #AJITHatRiflechampionship என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc