பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகுமா..?

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் அனைத்து கடைகளும் , திரையரங்கம் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாததால்  1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசுக்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.அதில் ,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போனதால் தேர்வு எழுத துடித்துக்கொண்டு இருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாடவேண்டிய இளம்பிஞ்சுகள், ஊரடங்கு உத்தரவால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு ரத்து குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என விளக்கம் அளித்துள்ளார்.

author avatar
murugan