27 மாவட்டத்தில் உள்ள 10,306 ஊராட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்!

  • மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல்.
  • 10,306 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது.

27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சிகளில் 240 இடங்களில் அதிமுகவும், 271 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றது. அதேபோல 5090 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2199 இடங்களில் அதிமுகவும், 2356 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கும் மாவட்ட ஊராட்சி தலைவர்(27), மாவட்ட ஊராட்சி துணை தலைவர்(27), ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்(314), ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர்(314), ஊராட்சி துணை தலைவர்(9624) ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10,306 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த ஊராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.