டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்.!

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 08 முதல் 20ம் தேதி வரை தப்லிகி

By balakaliyamoorthy | Published: Apr 01, 2020 02:30 PM

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 08 முதல் 20ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பின்னர் மீதமுள்ள 616 பேர் தாங்களாகவே முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். டெல்லியில் இருந்த தமிழகம் வந்தவர்களில் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்று குறிப்பிடப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, மார்ச் 8 - 20 வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்  7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் இருப்பதால், மருத்துவ பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc