சிட்னி நகரின் சாலையில் இருந்தவர்களை கத்தியால் தாக்கிய வாலிபர்!இளம் பெண் பலி!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம்

By murugan | Published: Aug 13, 2019 06:15 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் ஏரியாவில் வழக்கம் போல இன்று மக்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு கையில் கத்தியுடன் உலவி வந்து உள்ளார். அப்போது திடீர்ரென அந்த வாலிபர் கத்தியை வைத்து சாலையில் கண்டவர்களை எல்லாரையும் சரமாரியாக தாக்கினார்.இதனால் அவரை பிடிக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.அப்போது அந்த வாலிபர் அல்லாஹீ அக்பர் என்றும் என்னை சுடுங்கள் என்றும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் சாதுரியமாக சேர் ஒன்றை வாலிபருக்கு முன்னால் போட்டனர். அதில் நிலை தடுமாறி விழுந்த அந்த வாலிபரிடம் இருந்து கத்தியை பிடிங்கினார். பிறகு போலீசாருக்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் கைது செய்யப்பட்ட இடத்தில் 21-வயது மதிப்பு தக்க ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்பெண்ணை இந்த வாலிபர் கொன்று இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.எதற்காக இப்படி இந்த வாலிபர் செய்தார் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் சிட்னி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc