சஸ்பெண்ட்: வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர் !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தை சார்ந்த செல்வம்

By murugan | Published: Aug 03, 2019 08:45 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தை சார்ந்த செல்வம் (45) இவர் காவேரிபட்டணம் அருகே உள்ள சந்தாபுரம்  ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செல்வத்திற்கு பல ஆண்டுகளாக குடிக்கும் பழக்கம் உள்ளதால் மாதத்தில் பாதி நாள்கள் பள்ளிக்கு  வராமல் இருந்தார்.  இதனால் ஆறு மாதத்திற்கு முன் ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் எச்சரிக்கை கடிதம் கொடுத்து உள்ளார். ஆனால் தொடர்ந்து செல்வம் குடிப்பதை நிறுத்தாமாலும் மீண்டும் பள்ளிக்கு வராமல் இருந்து உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளி வகுப்பறையில் குடித்து விட்டு செல்வம்  விழுந்து கிடந்துள்ளார். இது குறித்து சக ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி விசாரணை நடத்தியதில் செல்வம்  குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
Step2: Place in ads Display sections

unicc