தனிநபர் செய்த குற்றத்திற்காக சமூக வலைத்தளத்தின் மீது குற்றம் சாட்ட முடியுமா?! உச்ச நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப் மூலம் அதிக குற்றங்கள் நடைபெறுவதகவும், ஆதலால் அந்த சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்னை கட்டாயமாக இணைக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் பேஸ்புக் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘ பேஸ்புக் இணையதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் தான் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பது ஏற்கக்கூடியது அல்ல. பேஸ்புக் மூலம் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, ‘ தனிப்பட்ட ஒருவர் செய்த குற்றத்துக்காக சமூக வலைத்தளத்தை குற்றம் கூறமுடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.