புலம்பெயர் தொழிலாளர் மீதான வழக்கை திரும்ப பெறுக.. மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, ஒரு வேலை உணவுக்காக திண்டாடி வந்தனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்ல தொடங்கினர்.

இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல மாநில அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்தால், அவர்களை 15 நாட்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாள்ர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையங்களை அமைத்து உதவி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.