"சூப்பர் ஸ்டார் படத்துக்கு வந்த சோதனை" திரையரங்கு அடித்து நொறுக்கப்பட்டது…!!

2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியை நீக்கக்கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் ரசினிகாந்த் இந்த காட்சியை நீக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான  திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்ப்பட்டது. இந்த தாக்குதலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் தாக்கப்பட்டனர்.
இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார்.
DINASUVADU.COM 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment