பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் பங்கேற்ற சூப்பர்ஸ்டார் ரஜினி !

இந்தியாவின் 17- வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்,தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் உற்சாகத்துடன் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment