இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இந்த பிரச்சனைகளுக்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காணும் போது, பல பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். ஆனால், நாம் இயற்கையான முறையில் தீர்வு காணும் போது அது நிரந்தரமானதாக இருக்கும்.

தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில வழிகளை பற்றி பார்ப்போம்.

பப்பாளி மாஸ்க்

தேவையான பொருட்கள்

  • பப்பாளி – ஒரு சில துண்டுகள்
  • தேன் – 1 மேசைக்கரண்டி

செய்முறை

ஒரு சில பப்பாளி துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பப்பாளி துண்டுகளை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள் ஒரு மேசைக்கரண்டி தேனை கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் நன்கு பூச வேண்டும். அதன்பின், ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாலை மாஸ்க்

தேவையானவை

  • கற்றாலை ஜெல் – சிறிதளவு
  • வைட்டமின் இ எண்ணெய் – 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை

கற்றாலை ஜெல்லை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுள் வைட்டமின் இ எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தயிர் மாஸ்க்

தேவையானவை

  • கெட்டியான தயிர் – 2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை

2 கரண்டி கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதனை முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கி, சருமத்தை பாதுகாக்கலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment