அதிவேகமாக 7000 ரன்கள் - இதுவரை இருந்த சாதனைகளை முறியடித்த ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர்

By venu | Published: Nov 30, 2019 11:18 AM

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார் . பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விளையாடி வருகிறது.இதில் 3 டி -20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.முதலில் நடந்த டி-20 தொடர் நடைபெற்றது.இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 7000 ரன்களை கடந்து டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.இவர் 126 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்து இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் சாதனையை முறியடித்துள்ளார்  ஸ்டீவ் ஸ்மித். வாலி ஹேமண்ட்  131 இன்னிங்ஸில் 7,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.இந்த சாதனையை  ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.மேலும் 7000 ரன்களை கடந்த 11-வது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆவார்.  
Step2: Place in ads Display sections

unicc