எந்த புயல் வந்தாலும் , சுனாமி வந்தாலும் ஸ்டாலின் குறை தான் சொல்வார்-முதல்வர்.!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் 9, 000 கோடி நிதி தமிழகம் கேட்டுகொண்டது அதில் உடனடியாக 1,000 கோடி நிதி அனுப்ப மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்த நிலையில்  மத்திய அரசு 510 கோடியை மட்டும் அனுப்பி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் , பிரதமர் மோடியிடம் காணொளி மூலம் பேசும்போது இது குறித்து தெரிவித்து விட்டோம் .
மேலும் தமிழகம் சார்பில் தேவையான நிதியை கோரி உள்ளோம் எங்களுடைய கடைமையை செய்துள்ளோம். ஆனால் எதிர்கட்சியை சார்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் 38 பேர் உள்ளனர்.
அவர்கள் மத்திய அரசிடம் ஏதாவது வற்புறுத்தி உள்ளர்களா.?கொரோனா  தடுப்பதில் அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற திமுக எம்.பிக்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்..? புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

author avatar
murugan