தோல்விக்கு காரணம் இதுதான்: டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் பேச்சு

  • நாங்கள் நன்றாக விளையாடினாலும் ஆனால் பஞ்சாப் அணி எங்களை வீழ்த்திவிட்டது.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 166 ரன்கள் மட்டுமே எடுத்தது

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் சார்பில் கிறிஸ் கெய்ல் மற்றும் அனுபவ பந்துவீச்சாளர் அன்ரூ டை நீக்கப்பட்டுள்ளனர். இது அஸ்வின் அணிக்கு பெரும் தடையாக அமைந்திருக்கிறது.

துவக்க முதலில் சரியாக ஆடாத பஞ்சாப் வீரர்களால் பெரிதாக ஏதும் எடுக்க முடியவில்லை. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுஹ்ட்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது பஞ்சாப் அணி.

எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணி தொடக்க முதலே அதிரடியாக ஆடியது. இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி அணியில் ஷிகர் தவான் 30 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும் ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது அஸ்வின் முகமது சமி, fசாம் குர்ரான் ஆகியோர் அபாரமாக பந்துவீசினார். இதில் நாம் குர்ரான் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி டெல்லி அணி 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது..

இது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு பந்தாக வெற்றியை நோக்கி கொண்டிருந்தோம். இறுதியில் இப்படி ஆனது மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் நன்றாக விளையாடினாலும் ஆனால் பஞ்சாப் அணி எங்களை வீழ்த்திவிட்டது. அனைத்து இடங்களிலும் நாங்கள் வீழ்த்தப்பட்டோம்இறுதியில் நிறைய விக்கெட்டுகள் விட்டது இந்த தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ் அய்யர்

author avatar
Srimahath

Leave a Comment