வேலூர் சிமெண்ட் குடோனில் ரூ. 11.53 கோடி பறிமுதல்?

சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையியல் இருதினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில்  ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை  மேற்கொண்டனர்.அதுபோல்  காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மேற்கொண்டு வந்தனர்.

மேலும்  தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர்  துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.அதேபோல்  சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் வெளிவந்துள்ளது.

 

Leave a Comment