அணிக்காக வெறி கொண்ட அபார ஆட்டம்..!நடுவே குழந்தைக்கு தாய்ப்பால்..!புருவத்தை விரிய வைத்த வீராங்கனை..!

மிசோரம் மாநிலம் துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்தவர் வீராங்கனை லால்வெண்ட்லுயாங்கி

By kavitha | Published: Dec 10, 2019 08:58 PM

மிசோரம் மாநிலம் துய்கும் என்ற வாலிபால் அணியை சேர்ந்தவர் வீராங்கனை லால்வெண்ட்லுயாங்கி என்பவர் இவர் மிசோரம் மாநில அளவிலான வாலிபால் தொடர் போட்டியில் பங்கேற்று உள்ளார். தனது அணிக்காக அபாரமாக ஆடி வெற்றிக்கு உத்வி கொண்டு இருந்த அவர்.இடைவேளையில் அடிக்கடி ஒடி சென்று வந்து கொண்டிருந்தார்.இதனை சற்று உற்று நோக்கியவர்களின் புருவத்தை உயர வைத்துள்ளார். இவர் அடிக்கடி ஒடிச் சென்று தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி விட்டு தனது அணிக்காகவும் விளையாடினார். தனது குழந்தைக்கு பசி ஆற்ற வேறு வழிகள் இருந்தப் போதிலும் அவர் தாய்ப்பாலை புகட்ட மறக்கவில்லை மேலும் தவிர்க்கவில்லை அந்த ஒரு நிகழ்வு தான் அவரை எல்லாரும் பாராட்டக் காரணமாக அமைந்துள்ளது.இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதலங்களில் வெளியாகி  தாய்மையின் மகத்துவத்தை  எடுத்துக்கூறி வருகிறது.தாய்மை எப்பொழுதும் ஒரு படி அனைத்திற்கும் மேல் தான்.   மேலும் இந்த வீராங்கனையை பாராட்டி மிசோரம் மாநில மந்திரி ராபர்ட் ரோமிவியா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீராங்ககனை தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படத்தை பகிர்ந்து விராங்கனைக்கு எனது சல்யூட் என்று கூறியுள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc