தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் தென்மேற்கு பருவ மழையானது நாளை முதல் தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வருடம் தோறும் தென்மேற்கு பருவமழையால் கேரளா மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களும் பயனடையும்.இனிநிலையில் இந்த ஆண்டு பருவ மழையானது ஜூன் 2 ம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் வேகம் இல்லாததால் தொடர்ந்து தாமதமாகி வந்தது.இப்போது காற்றின் வேகம் மிக வலுவடைந்துள்ளதால் நாளை ஜூன் 8 பருவ மழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.