இந்தியாவில் 25 வருடம் இல்லாத அளவிற்கு பெய்த தென்மேற்கு பருவமழை..!

இந்தியாவில் பொறுத்தவரை இரண்டு வகையான பருவ மழைகள் உள்ளன. தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை.இதில்  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.
இந்த பருவ மழை தான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன்  08-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இது வழக்கத்தைவிட 33 சதம் குறையாக பெய்தது.
பிறகு ஜூலை மாதம் தீவிரமடைந்த பருவமழை வழக்கத்தை விட 33 அதிகமாக பெய்தது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 17 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. செப்டம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் சராசரியாக 24.71 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது வழக்கமாக பெய்யும் மழையை விட 48 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவில் மழை  இந்த ஆண்டு பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.

author avatar
murugan