பெட்ரோல் – டீசல் விலை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் -சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம்

கச்சா எண்ணெய் விலைச்சரிவை ஏழை எளிய மக்களுக்கு பயனுறும் வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சோனியா காந்தி.

கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.80.37-க்கும் டீசல் ரூ.73.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்த கொரோனா காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.மேலும் பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வேண்டு என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது  

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,  நாடு முழுவதும் மக்கள் கற்பனை செய்ய முடியாத அச்சம் & பாதுகாப்பின்மை உணர்வால் இருக்கக்கூடிய நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்றி விடும் என்று தெரிவித்துள்ளார்.