இருமல் ,சளி உள்ளவர்கள் இந்த கசாயத்தை செய்து குடிக்கவும்.!

தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக

By murugan | Published: Jan 06, 2020 06:45 AM

தற்போது பருவநிலை மாறி உள்ளதால் சளி, இருமல் போன்றவே நம்மை நம்மை வந்து எளிதாக தாக்கிவிடும். இதுபோன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லதாகும். இல்லாவிடில் வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் அந்த வகையில் கடுமையான இருமலை கட்டுப்படுத்த இயற்கையான வைத்தியம் உள்ளது. தேவையான பொருள்கள்: முளைக் கீரை ஒரு கைப்பிடி அதிமதுரம் ஒரு துண்டு மஞ்சள் 3 சிட்டிகை செய்முறை: முதலில் மூளை கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 400 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் அதிமதுரம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். நீர் நன்கு கொதித்து பாதியாக சுண்ட வைத்து அதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த கசாயம் இருமல் , தொடர் இருமல் கக்குவான் இருமல் உள்ளவர்கள் அனைவரும் இந்த கசாயத்தை குடிக்கலாம். அப்படி குடித்துவர சில நாட்களில் அனைத்து இருமல்களில் இருந்து விடுபட முடியும்.
Step2: Place in ads Display sections

unicc