இந்த படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் வரை அபராதம்!

ரோம் நகரம் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது. இதனையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்நிலையில், ரோம் நகரில் அமைந்து சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் ஆகும்.

இந்த ஸ்பானிஷ் படிகள் மொத்தம் 174 படிகளை கொண்டுள்ளது. இந்த படிகளில் யாரும் அமரக் கூடாது என அங்குள்ள காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், சுற்றுலா வரும் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.