தாயின் இறுதிச்சடங்கை வீடியோ பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்.ஐ.!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் நாடு முழுவதும் இரவு ,பகல் என்று பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எஸ்.ஐ ஆக உள்ளவர் சாந்தாராம். இவர் விஜயவாடாவில் தொடர்ந்து ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது தாய்  உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

எஸ்.ஐ சாந்தாராமுவிற்கு அதிகாரிகள் விடுமுறை கொடுத்ததும் விடுமுறை வேண்டாம் என கூறிய தாயின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து சாந்தாராம் கூறுகையில் , எனது தாய் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் நான்கு மாவட்டங்களையும் ,45 சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டும்.

இதனால்  கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து நான் வந்த பிறகு 18  நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் இதனால் எனது பணியை நான் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.

 

author avatar
murugan