அதிர்ச்சி தகவல்.!அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு .!

  • ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளது.
  • ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில்  அதிக அளவில் குழந்தைகள் இறப்பதாக புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளதாகவும் , ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும் , தொற்று பாதிப்பு தான் குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில் உண்மை நிலவரத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் இதுகுறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

author avatar
murugan