தோனியை 7வது இடத்தில் இறக்கியதற்கான காரணத்தை கூறிய – சஞ்சய் பங்கர்!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர் 2014-ஆம் ஆண்டு முதல் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் 119 ஒருநாள் போட்டிகள் , 50 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழி நடத்தியுள்ளார்.

உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ்க்கு  சிறப்பு பேட்டி அளித்த சஞ்சய் பங்கர்  உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு  எதிரான அரையிறுதி போட்டியில் தோனி 7 -வது இடத்தில் இறக்க காரணம் ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

Image result for சஞ்சய் பங்கர்

அதற்கு பதிலளித்த சஞ்சய் பங்கர் உலக கோப்பை தொடரின் தொடக்க வீரர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆனால் மிடில் ஆர்டரில் இறங்கும் வீரர்களை  சூழ்நிலைக்கு ஏற்ப களம் இறங்க திட்டம் செய்தோம்.

அதன்படி  40 ஓவர்களில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இந்த முடிவு செய்தோம்.
ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பிறகு தோனியாய்  கீழ் வரிசையில் இறங்க கேப்டன் கோலி  முடிவு செய்தார்.

Image result for சஞ்சய் பங்கர்

தோனியை அப்படி கீழ் வரிசையில் இறக்குவதால் 35 -வது ஓவருக்கு பிறகு  டெத் ஓவரிகளில் தோனியின் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவெடுக்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக்கை ஐந்தாவது இடத்தில் இறங்குவதை பற்றி ஓய்வு அறையில் அனைவரும் முடிவெடுத்தோம்.

தோனி  ஃபினிஷிங் பணியை முடிக்கவே அவர் ஏழாவது இடத்தில் இறக்கப்பட்டார். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல, அணியின் ஒட்டுமொத்த முடிவு என கூறினார்.

author avatar
murugan