ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டு…அணுஆயுத உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருகிறது..

 

பனிப்போர்க் காலக்கட்டத்தில் 1987ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓர் அணுஆயுத உடன்படிக்கை கையொப்பமாகியது. அந்த உடன்படிக்கையில் இரு நாடுகளும் ஒன்றையொன்றை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது. இதை மீறும் வகையில் ரோமேனியாவில் அமெரிக்காவின் ஏவுகணைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அமெரிக்கா, புதிய ஏவுகணையைத் தயாரித்துள்ளதன் மூலம் ரஷ்யாதான் அணு ஆயுத உடன்படிக்கையை மீறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

source: dinasuvadu.com

Leave a Comment