கொரோனாவால் ஆஸ்கர் விதிமுறையில் தளர்வு.!

டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

சினிமா உலகில் ஆஸ்கர் விருது மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. அதுவும், ஹாலிவுட்டில் சினிமாவில் மிக பிரபலம் வாய்ந்தவை. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலக முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் இருப்பார்கள். இதுவரை ஆஸ்கருக்கான பரிந்துரையில் இடம்பெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எதாவது ஒரு திரையரங்குகளில் குறைந்தது 7 நாட்களுக்கு திரையிடப்பட்டு இருக்க வேண்டும் என்பது விடுமுறையில் உள்ளது. ஆனால், தற்போது உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஒருபக்கம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல திரைப்படங்கள் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆஸ்கர் விதிமுறைகளில் சில மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியிடப்படும் படங்கள் 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்க தகுதி செய்யப்படும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று அந்நாட்டு ஊகங்கள் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்