பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ள அபுதாபி இளவரசர் .!

  • அபுதாபி இளவரசர் சேக் முகமது வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  • கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் செய்தபோது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய சேக் முகமது ரூ.300 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்தார்.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மீண்டும் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான் வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின் போது இளவரசர்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச உள்ளார். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது  வர்த்தகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபி இளவரசர் சேக் முகமது கடந்த 2019 -ம் ஆண்டு இதே மாதம் 6-ம் தேதி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய ரூ.300 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan