#BREAKING :லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

 லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான்  இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது .தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆய்வு செய்து வருகிறார்.