அரசியலா..வேண்டவே வேண்டாம்...தெறித்து ஓடிய கோலிவுட் முன்னணி நடிகர்..!

நடிப்பு மட்டுமின்றி, சமூக செயல்களிலும் ஆர்வம் காட்டி வருபவர், நடிகர் சூர்யா.

By surya | Published: Oct 01, 2019 05:01 PM

நடிப்பு மட்டுமின்றி, சமூக செயல்களிலும் ஆர்வம் காட்டி வருபவர், நடிகர் சூர்யா. இவரின் அகரம் பவுண்டேஷன் விழாவில் NEET தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றி காரசாரமாக விமர்சித்து பேசினார். இவரின் பேச்சு, ஆளும்கட்சியினரிடையே எதிர்ப்பையும், எதிர்கட்சியினரிடையே வரவேற்பையையும் பெற்றது. மேலும், காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், காந்தியை சுட்ட கோட்சேயை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவரின் பேச்சை கேட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து அவர் தரப்பில் கூறுகையில், "அவரின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என அவருக்கு தெரியும்" என அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Step2: Place in ads Display sections

unicc