சிகப்பு விளக்கு பகுதிக்கு வரமறுத்ததால் கால்டாக்சி டிரைவரை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி!அதிர்ச்சியான தகவல்!

சிகப்பு விளக்கு பகுதிக்கு வர மறுத்த கால்டாக்சி ட்ரைவர் காவல்துறை அதிகாரியே

By sulai | Published: Jan 14, 2020 08:48 PM

  • சிகப்பு விளக்கு பகுதிக்கு வர மறுத்த கால்டாக்சி ட்ரைவர் காவல்துறை அதிகாரியே ஆத்திரத்தில் பலமாக தாக்கியதோடு பலாத்காரம் செய்துள்ளார் .
  • இதன் காரணமாக தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியவர சஸ்பெண்ட் செய்ததோடு மேலும் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகினறன.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அருகே சாலை ஓரத்தில் கால்டாக்சி ட்ரைவர் ஒருவர் பணியில் இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி கான்ஸ்டபிள் அமித் தங்கட் தெற்கு மும்பை கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிகப்பு விளக்கு ஏரியாவுக்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கால்டாக்சி ட்ரைவர் அப்பகுதிக்கு என்னால் வர முடியாது வேற வண்டியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த கான்ஸ்டபிள் அமித் தங்கட் கால்டாக்சி ட்ரைவரை கொடூரமாக தாக்கியுள்ளார். பின்னர் அங்குள்ள ரயில்வே வளாகத்திற்குள் ஒதுக்குபுறமான இடத்திற்கு கால்டாக்சி ட்ரைவரை அழைத்து சென்று அவரை நிர்வாணப்படுத்தியதுடன் தனது காம வெறியை தீர்த்து கொள்ள ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பலாத்காரம் செய்துள்ளார் . பின்னர் அவரிடம் இருந்த செல்போன்,கார் சாவி,பணம் உள்ளிட்டவைகளை பறித்து சென்றுள்ளார்.இதன் காரணமாக கால்டாக்சி ட்ரைவர் அவசர உதவி எண் மூலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.பின்னர் கால்டாக்சி ட்ரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கான்ஸ்டபிள் அமித் தங்கட் கொலை முயற்சி இயற்கைக்கு மாறான பலாத்காரம் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் கான்ஸ்டபிள் அமித் தங்கட் -ன் துறை சார்ந்த ரயில்வே காவல்துறை அதிகாரிக்கு தகவல் தெரிந்தவுடன் அவரை சஸ்பெண்டு செய்துள்ளனர்.மேலும் கான்ஸ்டபிள் அமித் தங்கட் மீது மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc