தெலுங்கில் சூப்பர் ஸ்டாருக்கு 10 சதவீத தியேட்டர்களே கிடைத்துள்ளன! மீதம் யாருக்கு?!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் பேட்ட. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்துடன் தமிழில் தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாக உள்ளது.

பேட்ட படத்தை தமிழை போல தெலுங்கு, ஹிந்தியிலும் நாளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதில் தெலுங்கு சினிமாவில் நாளை பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆரின் வாழக்கை வரலாறு படம், ராமச்சரன் நடிக்கும் வினய வித்யே ராமா படமும் வெளியாக இருப்பதால் பேட்ட படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்க வில்லையாம். தெலுங்கு சீனி உலகில் 90 சதவீத தியேட்டர்களை இந்த படங்களே ஆக்கிரமித்ததால் 10 சதவீத தியேட்டர்களே பேட்ட படத்திற்கு கிடைத்ததாம்.

இதனை முன்கூட்டியே விநியோகிஸ்தர் தரப்பு கூறி ஜனவரி 26 ஆம் தேதிக்கு பேட்ட தெலுங்கு வெர்சனை வெளியிட சொன்னார்களாம் ஆனால் சன் பிக்ச்சர்ஸ் அதனை கண்டுகொள்ளவில்லை என விநியோகிஸ்தர் தரப்பு கூறி வருகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment