உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.சமரச குழுவின் முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கு தொடர்ந்து 40 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோவில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டது.

மேலும் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும்.  என்று மத்திய அரசுக்கும் , உத்தரபிரதேச மாநில அரசுக்கும்  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மூல மனுதாரர் சித்திக்கின் மகன் மவுலானா சையது ஆசாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் 217 பக்கங்கள் கொண்ட சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

author avatar
murugan