காதலுக்கு எதிர்ப்பு..! மகளை கொளுத்தி தற்கொலை முயற்சி செய்த தாய் ..!

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சார்ந்தவர் உமா மகேஸ்வரி.

By Fahad | Published: Apr 02 2020 08:07 PM

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சார்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கு 17 வயதில் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)என்ற மகள் உள்ளார்.அனிதா அதே பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனிதாவின் காதலுக்கு தாய் உமா மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி அனிதாவை கொளுத்தி உள்ளார்.மேலும் உமா மகேஸ்வரியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். இதை தொடர்ந்து அனிதாவையும் ,அவரது தாய் உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அனிதாவின் காதலன் ராஜ்குமாரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.