உலகக் கோப்பை இறுதிப்போட்டி- தோல்வியுற்ற நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது..!

உலகக் கோப்பை NZ VS ENG இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு

By balakaliyamoorthy | Published: Dec 05, 2019 10:37 AM

  • உலகக் கோப்பை NZ VS ENG இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • நியூசிலாந்து மனவுறுதி விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அணிகளை கொண்டு உலகக்கோப்பை  போட்டி நடத்தப்பட்டது. அதில் இறுதியாக உலகக்கோப்பைக்கு இறுதிச் சுற்றில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வந்தது. பின்பு இரு அணிகளும் ‘டிரா’வில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடந்தது. இதுவும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்துள்ள அணி எதுவோ அந்த அணிக்கு  கோப்பையை வழங்க வேண்டுமென்று நடுவர்கள் தீர்மானித்தனர்.அதன்படி இங்கிலாந்து அணி தான் அதிக பவுண்டரிகள் அடித்திருந்தது.இதனால் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வழங்கப்பட்டது. நடுவரின் இந்த முடிவை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமின்றி ஏற்றுக்கொண்டனர்.இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc