சமஸ்கிருதம் மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது.! பாஜக எம்.பி பேச்சு.!

சமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள்

By balakaliyamoorthy | Published: Dec 13, 2019 02:58 PM

  • சமஸ்கிருத மொழியை தினமும் பேசி வந்தால் நீரிழிவு மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுக்கலாம் என பாஜக எம்.பி தெரிவித்தார்.
  • அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது.
டெல்லி நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பியான கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இஸ்லாமிய மொழிகள் உள்ளிட்ட 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானதாக தெரிவித்தார். சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனை கற்பிக்க பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருவதாகவும், மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அவர் கூறுகையில், சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோய் வராது  இதய கோளாறுகள் ஏற்படாது, கொழுப்பின் அளவினை தவிர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்து. அத்துடன் கம்ப்யூட்டரில் சமஸ்கிருத மொழி மூலம் மென்பொருளை வடிவமைத்தால் அதில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாது என அமெரிக்காவின் நாசா செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகவும் பாஜக எம்பி கணேஷ் சிங் கூறினார். இதனிடையே இந்த மசோதா குறித்து சமஸ்கிருதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி ஒரே ஒரு வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். சகோதரர், மாடு போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை தான் என்றும் அவர் கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc