புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • நாளை புதிய ஆண்டு பிறக்கிறது.
  • அதற்கான கொண்டாட்டங்கள் இன்று இரவு முதலே ஆரம்பமாகும் நிலையில் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 
புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.இதையொட்டி சென்னை போலீஸ்  சார்பில் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை  முழுவதும் சுமார் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய சாலைகளான மெரினா,சாந்தோம் ,காமராஜர் சாலை ,எலியட்ஸ் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகன ரசிங் ,குடிபோதையில் தகராறு ஆகியவற்றை கண்காணித்து தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.குடி போதையில் சிக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதி‌களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு