புதிய திருப்பம்! காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கூட்டணி இறுதியாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா முழுவது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.அதேபோல் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.ஆனால் பாஜக மட்டும் இன்னும் வெளியிடவில்லை.

அதேபோல் மாநில கட்சிகளும் தேர்தல் களத்தில் முழு வேகத்தில் ஈடுபட்டு வருகின்றது.அதேபோல்  மே 12-ஆம் தேதி டெல்லியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கூட்டணி இறுதியாகியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 தொகுதியிலும், ஆம் ஆத்மி 4 தொகுதியிலும் போட்டியிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கூட்டணி  அரசியல் வட்டராத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

Leave a Comment