கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. சில நாடுகளில் அண்மையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருந்தாலும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இரவு 9 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தினங்களில் அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்ட நிலையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ராய்பூர் மட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ஜோத்பூர், கோட்டா, அஜ்மீர், ஆழ்வார் போன்ற பல மாவட்டங்களுக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்
தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்...அதிர்ச்சி அதிகாரிகள்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனாத் தொற்று
உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் - கமலா ஹரிஸ்
கோலியை சாய்த்து பும்ரா புதிய சாதனை!