கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயாவை பாராட்டிய அமைச்சர் வேலுமணி.

கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம் – சிவகாமி தம்பதிகளின் மகளான அபிநயா, அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இளநிலை விவசாயம் பயின்றார்.

இதனை தொடர்ந்து, அபிநயா டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், தனது கனவான ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். கடந்தாண்டு ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அபிநயா அடுத்தடுத்த தேர்விலும் தேர்ச்சி பெற்று,  நேர்முக தேர்வில் கலந்து கொண்டு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அபிநயா  இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றிக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிற நிலையில், அமைச்சர் வேலுமணி அபிநயாவுக்கு தனது வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.