அமெரிக்காவில் டிக்டாக் உரிமையை வாங்க முயற்சிக்கும் மைக்ரோசாப்ட்.?

 கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி இந்த நிலையில், அமெரிக்காவில் பாதுகாப்பு காரணமாக  டிக்டாக்  தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எழுந்து உள்ளது.

மேலும், அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம்  தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும்  எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், டிக்டாக்கை அமெரிக்காவிலிருந்து தடைசெய்ய இன்று நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவதாக  செய்தியாளர்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்ததாக என்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,  டிக்டாக்கை அமெரிக்காவில் நிர்வகிக்கும் உரிமையை பெறுவதற்கு  மைக்ரோசாஃப்ட் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 65 முதல் 80 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கி டிக்டாக்கில் இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan