மகிமையான மருத்துவ குணங்களை கொண்ட முசுமுசுக்கை இலை...!

முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு

By leena | Published: Feb 05, 2019 11:34 AM

முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.

முசுமுசுக்கை இலை

Image result for முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் குணமாகும் நோய்களை பற்றியும் பார்ப்போம்.

ஆஸ்துமா

Image result for ஆஸ்துமா இந்த கீரை ஆஸ்துமா நோயை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த கீரையை தினமும் நமது உணவில் சேர்த்து கொண்டால் ஆஸ்துமா நோயில் இருந்து விடுதலை பெறலாம். நாளடைவில் இந்த நோயில் இருந்து முழுவதுமாக விடுதலை அடையலாம்.

சளி, இருமல்

Image result for சளி, இருமல் முசுமுசுக்கை கீரை சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த கீரை உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரை இருமல் மற்றும் சளியை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கிறது.

காசநோய்

Image result for காசநோய்     காசநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர பூரண சுகம் பெறலாம். இந்த கீரையை மட்டுமல்லாது இதன் கிழங்கையும் காச நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். காச நோய் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்குகிறது.

கண் எரிச்சல்

Image result for கண் எரிச்சல் முசுமுசுக்கை கீரை கண் எரிச்சலை குணமாக்குகிறது. இந்த இலையின் சாற்றை எடுத்து, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும். இது கண்ணெரிச்சல் மட்டுமல்லாமல் உடல் எரிச்சலையும் குணமாக்குகிறது.

இரத்தம்

Related image   முசுமுசுக்கை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டம் சரியாக இயங்க உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்கிறது.

சுவாச பிரச்சனை 

Related image இது சுவாச பிரச்சனைகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
Step2: Place in ads Display sections

unicc