மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு! 29 ஆண்டுகள் கழித்து அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி

By Fahad | Published: Apr 01 2020 02:10 PM

29 ஆண்டுகளுக்கு முன்னர், 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போதைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இருந்துள்ளார். அப்போது அவர் வீட்டருகே, காங்கிரஸ் கட்சியின் பேரணி அவரது தலைமையில் நடைபெற்றது. அப்போது நடந்த களோபரத்தில் மம்தாவின் தலையில் அடிபட்டது.  இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த லாலு ஆலம் என்பார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  அலிப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 29 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிலர் உயிரோடு இல்லை. மேலும் பல சாட்சியங்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிரோடு இல்லை ஆதலால் இந்த வழக்கை இன்னும் நடத்தினால் நேரமும் பணமும் செலவாகுமே தவிர ப;அந்த இல்லை என்பதால் இந்த வழக்கை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிடபட்டுள்ளது.

More News From LAALU ALAM