இந்திய விடுதலை போராட்ட வீரர் மைதிலி சரண் குப்த் பிறந்த தினம் இன்று!

மைதிலி சரண் குப்த் ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு இந்தி கவிஞர் ஆவார். இவர் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள சிர்கான் என்னும் ஊரில், 03-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1886-ம் ஆண்டு பிறந்தார்.

இவர் இந்திய போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர், 1940 ஆண்டு ஜான்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின் 1941-ம் ஆக்ரா சிறையிலும் சிறைத்தண்டனை பெற்றார். அதன்பின் 1952 முதல் 1964 முதல் 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் இந்தி கவிஞர் என்பதால், இந்தி ஆர்வர்களால், ‘ராஷ்டிர கவி’ என்று அழைக்கப்பட்டார். மேலிம், இந்திய அரசு இவருக்கு 1954-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. இந்நிலையில், இவர் 12-ம் தேதி, டிசம்பர் மாதம் 1964-ம் நாள் மரணமடைந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.