டிவி சீரியல் பார்த்து மனைவியை கொலை செய்த கணவன்! இரட்டை கொலை சம்பவம்!

  • மனைவியை கொலை செய்ய சீரியல் பார்த்து திட்டம் தீட்டியுள்ளான் முன்னாள்

By Fahad | Published: Apr 02 2020 04:12 PM

  • மனைவியை கொலை செய்ய சீரியல் பார்த்து திட்டம் தீட்டியுள்ளான் முன்னாள் வங்கி மேலாளர் அமிதேஷ் படாரியா.
  • தனது தந்தை, தங்கையுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு பாம்பு கடித்து இறந்துவிட்டார் என கணவன் நாடகம்.
  • பிரேத பரிசோதனையில் சந்தேகமடைந்து போலீசார் கண்டுபிடிப்பு 
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அமிதேஷ் படாரியா இவர் வங்கி மேலாளராக பணியாற்றி இருந்துள்ளார்.  இவர் தனது மனைவியை  கொலை செய்ய டிவி சீரியல் பார்த்து திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி போலீசில் சிக்கி கொண்டுள்ளார். இவர் டிவி சீரியல் பார்த்து ராஜஸ்தானில் இருந்து ஒரு நல்ல பாம்பை வாங்கி வந்து வைத்துவிட்டு, தன் மனைவி தூங்கும்போது தனது தந்தை, தங்கையின் உதவியுடன் மனைவியை கொன்றுள்ளான் அமிதேஷ் படாரியா. பிறகு, அந்த நல்ல பாம்பை இறந்த தனது மனைவியின் உடலில் கடிக்க வைத்துவிட்டு, அந்த பாம்பை கொன்றுவிட்டு தன் மனைவி பாம்பு கடித்து இறந்துவிட்டார் என கூறி நாடகமாடியுள்ளான். இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அந்த பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் , அப்பெண்னின் கணவரான அமிதேஷ் படாரியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உண்மையை கூறியுள்ளான். இதன் பேரில், அமிதேஷ் படாரியா, அவனது தந்தை, தங்கை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொன்ற வழக்குமட்டுமல்லாமல் பாம்பை கொன்றதனால் வனவிலங்கு தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டான் அந்த கொலைகாரன்.  

More News From செய்திகள்