ரூ .49 க்கு ஃபேவிபிராவிர் மருந்தை லூபின் நிறுவனம் அறிமுகம்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அதிலும், குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள், பாதிப்புகள்  அதிகமாகி வருகிறது.

கொரோனா முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.மேலும்,  கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளது.

இதையடுத்து,இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஃபேவிபிராவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நிறுவனமாக இந்த மருந்தை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லூபின் நிறுவனம் ஃபேவிபிராவிர் மாத்திரையை “கோவிஹால்ட்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு லேசான மற்றும் மிதமான அறிகுறிகளைக் கொண்ட சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மாத்திரைகள் கொண்ட பாட்டிலில்  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டேப்லெட்டுக்கு ரூ .49 என்ற  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை 200 மி.கி  எடை கொண்டது.

இதற்கு முன் சன் பார்மா நிறுவனம் இந்த ஃபேவிபிராவிர் மருந்தை  ரூ.35 செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan