சிறுமி எரித்து கொன்ற 2 பேர் மீது “குண்டாஸ்”..அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.!

விழுப்புரத்தில் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலம் மூலம் போலீஸார் முருகன் மற்றும் கலியபெருமாளை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமதி என்பவர் மனுதாக்கல் செய்தார். 

இதனையடுத்து காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுதாரர் சுமதி விளக்கம் கொடுத்ததால், மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து, சுமதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், தற்போது  சிறுமியை எரித்து கொன்ற முருகன், கலியபெருமாள் மீது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்