காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்கள்! பெற்ற மகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொன்றுவிட முயற்சி!

தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி பெயர் கவிதா. இவர்கள்

By manikandan | Published: Oct 10, 2019 08:15 AM

தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி பெயர் கவிதா. இவர்கள் மகள் தான் விவிதா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தேனி, அம்மாபட்டியை சேர்ந்த செல்ல பாண்டியும் காதலித்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விவிதாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றின் அருகே வந்துகொண்டிருந்த போது, காதலை கைவிடுமாறு கூறியதாகவும் அதற்கு விவிதா மறுப்பு தெரிவிக்கவே, விவிதாவின் பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றில் விவிதாவை தள்ளிவிட்டுள்ளனர், அதிர்ஷட வசமாக அவ்வழி சென்ற காவல்துறையினர் இதனை பார்த்து ஆற்றில் இருந்து விவிதாவை மீட்டனர். பின்னர் நடந்ததை கேட்டு, விவிதாவின் பெற்றோர்களான, ராஜா கவிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc