காஞ்சிபுரம் அருகே கண்டறியப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன!

கடந்த ஞாயிற்று கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள

By manikandan | Published: Aug 30, 2019 10:22 AM

கடந்த ஞாயிற்று கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில், ராணுவ பயிற்சிகாக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சில செயல் இழந்தும் செயல் இழக்காமலும் இருந்துள்ளது. இதனை அங்குள்ள இளைஞர்கள் எடுக்கையில் அவை வெடித்து சிதறின. இதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நேற்று இந்த இடத்தில் 10 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. அதில் சில செயல் இழந்தும், சில செயல் இழக்காமலும் கிடைத்துள்ள்ளன. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து இன்று வெடிகுண்டு நிபுணர்களுடன், வந்த காவல் துறையினர்  அனைத்து வெடிகுண்டுகளையும் செயல் இழக்க வைத்தனர். இதற்காக மணல் மூட்டைகளை குவியலாக அடுக்கி, அவற்றை வெடிக்க வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி மக்களை உள்ளே அனுமதிக்காமல் இருந்துள்ளனர். வெடிகுண்டுகள் செயல் இழக்க பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc